இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
தமிழ் சினிமா உலகம் இதுவரை எத்தனையோ திறமையான இளம் இயக்குனர்களை பார்த்துள்ளது. ஆனால், அவர்கள் புரியாத சாதனைகளை மூன்றே மூன்று இளம் இயக்குனர்கள் இந்த 2023ம் ஆண்டில் புரிந்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்தை இளம் இயக்குனராக நெல்சன் இயக்கியிருந்தார். அப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலைக் கடந்துள்ளது. அடுத்து ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'ஜவான்' படத்தை இளம் இயக்குனரான அட்லீ இயக்கியிருந்தார். அப்படம் ரூ.1150 கோடி வசூலைக் கடந்துள்ளது. கடந்த வாரம் வெளியான விஜய் நடித்த 'லியோ' படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருவதாகச் சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் மூன்று இளம் இயக்குனர்களான அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகிய மூவர் மட்டுமே இந்த ஒரே ஆண்டில் மொத்தமாக ரூ.2200 கோடி வசூலைப் பெற காரணமாக இருந்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த்தின் 171வது படத்தை இயக்க உள்ளார். நெல்சன், அட்லீ அடுத்து யாரை இயக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.