'2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து வருகிறவர் சமுத்திரகனி. குறிப்பாக தமிழை விட தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏராளமான படங்களில் நடிப்பதோடு, படம் இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் தயராகும் படத்தின் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபாகர் ஆரிபா , பிருத்வி போலவரபு தயாரிக்க, பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்குகிறார். அருண் சிருவேலு இசை அமைக்கிறார், துர்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் கதை எழுதியுள்ளார்.
படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. பின்னர் படம் குறித்து இயக்குனர் தன்ராஜ் கொரனானி கூறும்போது “அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம், இதுவரை யாரும் சொல்லப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது. நவம்பர் 9ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. ஐதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்.