''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சென்னையில் கடந்த மாதம் நடத்திய இசை நிகழ்ச்சி 'மறக்குமா நெஞ்சம்'. அதில் அனுமதிக்கப்பட்ட டிக்கெட்டிற்கும் அதிகமாக விற்று பல ஆயிரம் பேர் கூடியதால் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் விழா அரங்கிற்குள் நுழைய முடியாமல் திரும்பினர்.
பலரும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பின் காவல் துறை விசாரணையில் இறங்கியது. அதன்பின் விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என ஏஆர் ரஹ்மானும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம், 1500 டிக்கட்டுகளுக்கான கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 1000 டிக்கெட்டுகளுக்கு அனுப்ப வேண்டியதை பரிசீலித்து வருகிறோம். அது முடிவடைந்ததும் அப்டேட் தருகிறோம் என்று அறிவித்திருந்தார்கள்.
அந்தப் பதிவில் இன்னமும் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்காதவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ‛‛ஒரு மாதமாகிவிட்டது இன்னும் வரவில்லை, நான் பல முறை மெயில் செய்துவிட்டேன், 2500 பேருக்கு மட்டும்தான் திரும்பவும் தருவீர்களா, 25000 டிக்கெட்டுகளை அதிகமாக விற்றுள்ளீர்கள், 2400 பேருக்கு மட்டும்தான் திரும்பத் தருவீர்களா, எத்தனை மெயில்கள் உங்களுக்கு வந்துள்ளது, யாருக்கெல்லாம் திரும்ப அளித்தீர்கள் சொல்லவும்,” என கமெண்ட் செய்துள்ளார்கள்.