தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி | 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகளை வழங்குங்கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை | கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.
தெலுங்கில் வழக்கத்தை விட அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியானது. முதல் நாளில் 16 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சற்று முன் இரண்டாவது நாள் வசூலையும் சேர்த்து இரண்டு நாளில் 24 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலை விடவும் இரண்டாவது நாள் வசூல் பாதியாகக் குறைந்துள்ளது.
இருப்பினும் நேரடித் தெலுங்குப் படங்களான 'பகவந்த் கேசரி, டைகர் நாகேஸ்வரராஜ்' ஆகிய படங்களுடன் போட்டியிட்டு இன்று மூன்றாவது நாளிலும் குறிப்பிடும்படியான முன்பதிவு நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தெலுங்கு உரிமையாக இப்படம் 20 கோடிக்கு பேசப்பட்டு 16 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. 24 கோடி மொத்த வசூலில் நிகரத் தொகையாக 12 கோடிக்கும் அதிகமாக வந்திருக்கும். இன்று அல்லது நாளைக்குள் இப்படம் லாபக் கணக்கைத் துவங்கிவிடும் என்கிறார்கள்.