ரோபோ சங்கர் மறைவு : மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன.? | நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை |
'அண்டே சுந்தரனிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது நானியின் 31வது படமாக உருவாகிறது. இதனை டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு மற்றும் பூஜை நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது இதில் வில்லனாக நடிக்க நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இதற்கு முன்பு எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது கேம் சேஞ்சர் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.