காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த சினிமா என்கிற பெயரை இந்த படம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலக பிரபலங்களும் கூட இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த லியோ படத்தை ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை நிவேதா தாமஸ் லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு அது குறித்த மகிழ்ச்சியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறும்போது, “ஒவ்வொரு முறையும் விஜய் அண்ணாவுக்காகவே மீண்டும் மீண்டும் படத்திற்கு செல்கிறேன். விஜய் அண்ணா இந்த படத்தில் உங்களது பணி சந்தேகமே இல்லாமல் மிகச்சிறந்தது. ஒரு ரசிகையாக லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸில் மதிப்புமிக்க சில மணி நேரங்களை உற்சாகமாக செலவிட்டேன்” என்று கூறியுள்ளார் நிவேதா தாமஸ்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.