சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

சமீபத்தில் மலையாள முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மலையாள சினிமா பிரபலங்களான மின்னல் முரளி புகழ் இயக்குனர் பஷில் ஜோசப், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 2018 படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் நடிகை நிகிலா விமல் ஆகியோர் கலந்து கொண்டனர். தியேட்டர்களுக்கான சினிமா முடிவு பெறுகிறதா என்கிற விவாதம் அப்போது நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பான் இந்தியா படங்கள் குறித்த பேச்சு வந்தபோது, இயக்குனர் பஷில் ஜோசப், மலையாள திரையுலகில் பான் இந்தியா படங்களை எடுப்பது என்பது ரிஸ்க்கான ஒன்று என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய நடிகை நிகிலா விமல் திரையரங்குகளின் வசதி குறைபாடுகள் பற்றி கடுமையாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “ஒரு குடும்பம் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 2000 ரூபாய் செலவு செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது தாங்கள் செலவழிக்கும் பணத்திற்கு திரையரங்குகளில் இருந்து நல்ல தரமான வசதிகளை தான். ஆனால் பல திரையரங்குகள் இந்த விஷயத்தில் ரொம்பவே மோசமாக இருக்கின்றன. குறிப்பாக பல திரையரங்குகளில் தொழில்நுட்பக் குறைபாடுகள் நிறைய இருக்கின்றன. இதனால் படம் பார்க்க வரும் ரசிகர்கள், இதை நாங்கள் வீட்டிலிருந்தே பார்த்து விடுவோமே என வருத்தப்படுகிறார்கள். நான் ஒரு திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது தியேட்டர் ஆபரேட்டர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் திடீரென படத்தின் சத்தத்தை அவர்களாகவே குறைத்து வைத்து விட்டார்கள். அது ஏனென்றே தெரியவில்லை” என்று குற்றம் சாட்டினார்.