ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் அக்டோபர் 21ம் தேதி வெளியான படம் 'சர்தார்'. சுமார் 100 கோடி வசூலைப் பெற்ற வெற்றிப் படமாக இப்படம் அமைந்தது.
படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கார்த்தி, “பிளாக் பஸ்டர் படமான சர்தார்' வெளியாகி ஓர் ஆண்டாகிறது. இந்த மைல்கல்லை எட்டியதற்காக எனது அன்பான ரசிகர்களுக்கு நன்றி. 'சர்தார் 2' விரைவில் ஆரம்பமாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாகிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதற்கடுத்து 'சர்தார் 2' படம் ஆரம்பமாகலாம். அதற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2' படமும் உருவாகலாம்.