நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' |

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து தீவிரமாக நடைந்து வருகிறது. இந்த சமயத்தில் இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா சமீபத்தில் பத்திரமாக இந்தியா திரும்பினார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில் வெளியான அகெல்லி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் கதாநாயகனாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஷாய் ஹலேவி என்பவர் நடித்திருந்தார்.
இதற்கு முன்பு இஸ்ரேல் மற்றும் பிரெஞ்ச் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் முதன்முதலாக அகெல்லி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் அடி எடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் தனது நாட்டு ராணுவத்தில் இணைந்து ஹமாஸ் போரில் ஈடுபட்டு வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அகெல்லி படத்தின் தயாரிப்பாளர் நினத் வைத்யா உறுதிப்படுத்தியுள்ளார்..
இதுகுறித்து அவர் கூறும்போது, “இஸ்ரேலில் தற்போது போர் நிலவரம் தீவிரமாக இருப்பதால் ஷாய் ஹலேவியின் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் விதமாக அவரை தொடர்பு கொண்டபோது தனது நாட்டிற்காக ராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்” என்று கூறியுள்ளார் ஒரு நடிகர் ராணுவ வீரராக மாறி போரில் பங்கெடுத்து வருவது ஆச்சரியமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது