''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பொதுவாக திரைப்படங்களுக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவேளை விடுவார்கள். தியேட்டர் கேண்டீன் விற்பனைக்காக இந்த இடைவெளி விடப்படுகிறது. ஆனால் லியோ படத்தின் நீளம் இரண்டேமுக்கால் மணி நேரம். ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட வேண்டும். இதை கருத்தில் கொண்டு லியோ படத்திற்கு இடைவேளை நேரத்தை குறைக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
'லியோ' சினிமா சிறப்புக்காட்சிகள் நேரம் தொடர்பான பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். பின்னர் சங்கச்செயலாளர் வி.டி.எல்.சுப்பு நிருபர்களிடம் கூறியதாவது: நாளையில் இருந்து 6 நாட்களுக்கு சிறப்பு காட்சியாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்த முதல் அமைச்சருக்கு நன்றி. பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில்தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கும்.
லியோ படம் பெரிய படம் என்பதால் இடைவேளை நேரத்தை 5 நிமிடமாக குறைக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழக அரசு சொன்னபடி காலை 9 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளையும் முடித்துவிடுவோம். ஏற்கனவே முன்பதிவை தொடங்கி விட்டோம். இனி அதை மாற்ற முடியாது. அதனால் 9 மணிக்கு காட்சியை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
19ம் தேதியன்று (நாளை) மட்டும் இன்னும் முன்பதிவு செய்யவில்லை. அன்றைய தினம் அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். அரசு கொடுத்த நேரத்தின்படி படத்தை ஓட்ட தயாராகி விட்டோம். 5 காட்சிகள் திரையிடப் போகிறோம். தயாரிப்பாளர்கள் தரப்பில் காலை 7 மணிக்கு படத்தை தொடங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை 9 மணிக்கு தொடங்குவதில் என்ன வித்தியாசம் உள்ளது. காலை 9 மணி என்ற அளவில் முன்பதிவு டிக்கெட் கொடுத்துள்ளோம். அதை மாற்றுவது சரியாக இருக்காது. பிரச்னை வரும். ஆனாலும் அரசு என்ன அனுமதி கொடுக்கிறதோ அதை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.