சுந்தரி நடிகைக்கு திடீர் திருமணம் | இயக்குனரின் படமாக இருக்குமா ரஜினியின் 'வேட்டையன்'? | ஹிந்தி பிக்பாஸில் முதல் தமிழ் போட்டியாளராக நுழைந்த சூர்யாவின் கதாநாயகி | மொட்டைத்தலையுடன் கோலங்கள் ஆனந்தி! என்னாச்சு அவருக்கு? | உங்களால் எனக்கு ஏற்பட்ட ரூ.1 கோடி நஷ்டம் : பிரகாஷ்ராஜை விளாசிய தயாரிப்பாளர் | உலக சாதனை புத்தகத்தில் நடிகர் அஜித்தின் நிறுவனம் | ‛தெறி' பட ஹீந்தி ரீ-மேக்கில் சல்மான் கான் | நவராத்திரி : துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பிரதிபலித்த ஏக்தா ஜெயின் | வெப் சீரியல் இயக்கும் நடிகை ரேவதி! | ஜசரி கணேஷ் பிறந்தநாள் பார்டியில் தனுஷ் : அடுத்த படம் இவருக்குதான் |
2023ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி, நள்ளிரவு 1 மணி இருக்கலாம். அஜித் நடித்த 'துணிவு' படத்தின் நள்ளிரவு சிறப்புக் காட்சியைக் காண வந்த 19 வயதே ஆன அஜித் ரசிகர் பரத்குமார் உற்சாகத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீதிருந்து கீழே குதித்தார். அவரது முதுகுப் பகுதியில் எலும்புகள் நொறுங்கி பலத்த அடி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
வேலைக்குச் சென்று தனது தம்பியைப் படிக்க வைத்து வந்தார் என அவரது உறவினர்கள் இறுதிச் சடங்கின் போது அழுது கொண்டே பேசினார்கள். இறந்த அந்த இளைஞரின் குடும்பத்திற்கு அப்படத் தயாரிப்பாளர் உதவி செய்தாரா, அல்லது நடிகர் அஜித் உதவி செய்தாரா என்பது இதுவரை தெரியவில்லை. எவ்வளவு உதவிகள் செய்தாலும் அந்த இளைஞனின் உயிரிழப்புக்கு ஈடாகாது.
அந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் இப்படி நள்ளிரவு, அதிகாலை காட்சிகள் என நடத்தும் நடிகர்கள் மீதும், தியேட்டர்கள் மீதும் சமூக ஆர்வலர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றத்தில் சில வழக்குகளும் தொடுக்கப்பட்டன. எந்தவிதமான அனுமதியும் இன்றி அப்படி சிறப்புக் காட்சிகளைத் திரையிட்ட தியேட்டர்களுக்கு வெறும் 2000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து, வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று தியேட்டர்காரர்கள் நீதிமன்றத்தை நாடியதும் நடந்தது. ஆனால், நீதிமன்றம் அந்த வழக்குகளை ரத்து செய்ய மறுத்தது.
அடம் பிடிக்கும் 'லியோ'
அந்த 'துணிவு' சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் இதுவரையிலும் அதிகாலை காட்சிகளுக்கு அரசு தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள 'லியோ' படக்குழுவினர் அழுது அடம் பிடித்து வருகின்றனர். அரசு தரப்பில் அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் 5 காட்சிகளை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு
இந்நிலையில் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழங்கியுள்ள அபிடவிட்டில், “ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'பதான்' படத்திற்கு மும்பையில் 6, 7 காட்சிகளும், டில்லியில் 6 காட்சிகளும் அனுமதி வழங்கியுள்ளார்கள். 'லியோ' படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடுகிறது. 20 நிமிட இடைவேளை நேரத்துடன் சேர்த்து 3 மணி நேரம் 3 நிமிடம் ஒவ்வொரு காட்சிக்கும் தேவைப்படுகிறது. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் ரசிகர்கள் வந்து போக 40 நிமிட நேரம் தேவைப்படுகிறது. ஆக, ஒரு காட்சிக்கு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் தேவை.
ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட வேண்டுமென்றால் 18 மணி நேரம் 45 நிமிடங்கள் தேவை. ஆனால், அரசு ஆணையின்படி காட்சிகளை காலை 9 மணியிலிருந்து நள்ளிரவு 1.30க்குள் முடிக்க வேண்டுமென்பதில் 16 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே உள்ளது. காலை 7 மணிக்குக் காட்சிகளை ஆரம்பித்தால்தான் அவர்கள் சொன்ன நேரத்தில் முடிக்க முடியும்.
படத்திற்கு ரசிகர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி தந்துள்ளார்கள். எனவே, அது போலவே தமிழகத்திலும் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,” என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அரசு தரப்பிலிருந்து அதிகாலை காட்சிக்கு அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாம் என லியோ குழு சில நாட்களுக்கு முன்பே முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஏன் முட்டி மோதுகிறது ‛லியோ'
இது குறித்து நாம் திரையுலகத்தில் விசாரித்த போது, “லியோ' படத்தின் தயாரிப்பாளர் என்பவர் பெயருக்குத்தான் இருக்கிறார். ஆனால், படம் சார்ந்த விஷயங்களை விஜய், அவரது மேனேஜரும் இப்படத்தின் இணைதயாரிப்பாளருமான ஜெகதீஷ், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் ஆகியோர்தான் எடுக்கிறார்கள்.
நம்பர் 1 ஹீரோ என நிரூபிக்க
தமிழ் சினிமாவில் இப்போதைய ஹீரோக்களில் விஜய்தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், அதிக வசூலைக் குவிக்கும் நடிகர் என இருந்து வந்தது. ஆனால், கடந்த வருடம் சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', இந்த வருடம் மற்றொரு சீனியர் ஹீரோவான ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' ஆகிய படங்கள் விஜய் படங்களின் சாதனையை முறியடித்தது. தான்தான் தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோ என நிரூபிக்க 'லியோ' படத்தை பயன்படுத்துகிறார் விஜய்.
தினம் லியோ பரபரப்பு
அதிகாலை 4 மணி காட்சி, 7 மணி காட்சி ஆகியவற்றை நடத்தினால்தான், படம் வெளியாகும் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த ஹீரோ, மொத்தமாக வசூலைக் குவித்த ஹீரோ என்ற சாதனையைப் படைக்க முடியும். அவை இல்லை என்றால் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்த முடியாது. எனவே தான் இப்படி செய்து வருகிறார்கள். படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கவே அரசிடம் கோரிக்கை, நீதிமன்றத்தில் வழக்கு என படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்தி அடிபட வேண்டும் என்பதும் படக்குழுவின் எண்ணமாக உள்ளது. இதனால் சமூகவலைதளங்களில் உள்ள சில இன்புளூயன்சர்களை பணியமர்த்தி உள்ளார்கள். இதற்கு பின்னணியில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங்கும் வேலை செய்கிறதாம்.
அதிக அளவில் பிசினஸ்
மேலும், லியோ படம் எதிர்பார்த்த அளவு இல்லையென்றும், எதிர்பார்ப்பு இருக்கும் போதே அதிகக் காட்சிகளை நடத்தி வசூலைப் பெற்றுவிட வேண்டும் என்றும் நினைக்கிறார்களாம். படம் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம். ஒருவேளை படத்திற்கு எதிர்மறை விமர்சனம் வந்தால் போட்ட முதலீட்டைத் திரும்பப் பெறுவது மிகவும் சிரமம் என்கிறார்களாம்.
பலதரப்பிலிருந்து வரும் அழுத்தம் காரணமாகவே 'லியோ' தரப்பு கடைசி முயற்சியாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. நாங்கள் இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு படத்தை எடுத்துவிட்டோம், அதனால், அதிகாலை காட்சிக்கே அனுமதி தர வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்.
அடுத்து, படத்தின் டிரைலரில் இடம் பெற்ற கெட்ட வார்த்தை, படத்தில் உள்ள புகை பிடிக்கும், மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதும் ஒரு காரணம்.
ஒரு அப்பாவி இளைஞர் இறந்த சோகத்தை விட தங்களது இமேஜ் முக்கியம் என நினைக்கும் ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் இருப்பது வருத்தமான ஒன்று என்றும்,” கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
அழுது, அடம் பிடிக்கும் 'லியோ' குழுவுக்கு நீதிமன்றம் சரியான பாடம் கற்றுக் கொடுக்கப் போகிறதா அல்லது கூடுதலாக படத்தைத் திரையிட அனுமதி கொடுக்கப் போகிறதா என்பது நாளை காலை தெரிந்துவிடும்.