அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது ஹிந்தியில் 'அனிமல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்காக கதாநாயகன் ரன்பீர் கபூர் உடன் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார்.
அந்தக் காட்சிகள் இடம் பெற்ற பாடல் ஒன்றை கடந்த வாரம் படக்குழு வெளியிட்டிருந்தது. மூன்று நிமிடப் பாடலில் மூன்று முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார் ராஷ்மிகா. அந்த முத்தம் சாதாரண முத்தமல்ல, உதட்டோடு உதடு வைத்த முத்தம்.
அக்காட்சியில் நடிப்பதற்காக ராஷ்மிகா கூடுதல் சம்பளத்தை வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு முத்தத்திற்கு 20 லட்ச ரூபாய் என அவர் கேட்டுள்ளாராம். வேறு வழியில்லாமல் படக்குழுவினர் சம்மதம் சொல்லி கூடுதல் சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் அதே காட்சியில் நடித்த கதாநாயகன் ரன்பீர் கபூரும் கூடுதல் சம்பளத்தைக் கேட்டிருக்க மாட்டாரா ?.