சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது ஹரி இயக்கும் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. இதில் காமெடியனாக யோகி பாபு நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் விஷாலுக்கு ஒரு முருகன் சிலையை பரிசாக கொடுத்திருக்கிறார் யோகி பாபு. அதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷால்.
அதோடு, காரைக்குடியில் காரில் சென்றபோது, ஒரு கடையில் முருகன் சிலையை பார்த்த யோகி பாபு, உடனே அதை வாங்கி எனக்கு பரிசாக கொடுத்தார். இது ஒரு மறக்க முடியாத பரிசு. ஐ லவ் யூ, நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார் விஷால். ஆக்ஷன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகி வரும் இந்த விஷால் 34வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.