குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான மெஹ்ரின் பிரதிஷ்டா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் படங்களில் நடித்திருந்தார். தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
மெஹ்ரின் பிரதிஷ்டாவுடன் வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. கிரைம் த்ரிலர் ஜார்னரில் உருவாகி உள்ள இந்த படத்தின் டைட்டில் உள்ளட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.