அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு ஆணையை சரியாக புரிந்து கொள்ளாத பல ரசிகர்கள் வேண்டுமென்றே அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணி முதல் காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், கோவை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தியேட்டர்களில் காலை 8 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளனர். படம் வெளியாகும் நாளைத் தவிர்த்து விட்டு அக்டோபர் 20 முதல் சில தியேட்டர்களில் முன்பதிவை நடத்தி வருகின்றனர்.
9 மணி முதல் காட்சிகளை நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் 8 மணி முதல் எப்படி காட்சிகளை நடத்த உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், படம் வெளியாகும் நாளில் அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்தத் தயாரிப்பு நிறுவனம் ‛விடாமுயற்சி' செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.