‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
தமிழ் சினிமாவில் பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு இன்னொரு பக்கம் நல்ல கதையை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்று வருகிறார். இவ்வளவு பிஸியாக இருக்கும் நிலையிலும் தற்போது ஒரு கதாசிரியராக மாறி ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்காக கதை எழுதி வருகிறார் யோகிபாபு.
சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. கடல் சார் பின்னணியில் உருவாகும் இந்த திரில்லர் படத்தில் யோகிபாபுவும் அவருடன் இணைந்து முக்கிய இடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே திரிஷா இல்லைனா நயன்தாரா படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் முதன்முதலாக நீங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருப்பதற்கு உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன். அடுத்ததாக நீங்கள் ஹீரோவாக நடிக்கும் நானும் முக்கிய வேடத்தில் நடிக்கும் நமது இரண்டாவது படத்திற்காக ஒரு கதாசிரியராக ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த இரண்டாவது படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார் யோகிபாபு.