நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் காலமானார். ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தாலும் 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரனாக மாரிமுத்து வாழ்ந்தார். அதனால் அவருக்கு ரசிகைகள் அதிகமானார்கள். அவரது மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மாரிமுத்துவும், வேல ராமமூர்த்தியும் அண்ணன், தம்பியாக நடித்துள்ள படம் விரைவில் வெளிவர இருக்கிறது. 'வீராயி மக்கள்' என்ற இந்த படத்தை ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்து நடித்துள்ளார். தீபா சங்கர், ரமா, செந்தில் குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டியக்கா, நந்தனா நடித்துள்ளனர். எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். சுசீந்திரன் உதவியாளர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார்.
படம் குறித்து நாகராஜ் கருப்பையா கூறுகையில், “ரத்த சொந்தங்களின் அன்பையும், பாசத்தையும் கிராமத்துப் பின்னணியில் மிக அழுத்தமாகச் சொல்லும் கதை. ஒரு திருமணத்தால் பிரிந்த குடும்பம், 25 வருடங்களுக்குப் பிறகு எப்படி இணைகிறது என்பது கதை. மாரிமுத்துவும், வேல ராமமூர்த்தியும் அண்ணன், தம்பியாகவே படத்தில் வாழ்ந்துள்ளனர். படத்திற்கு டப்பிங் பேசும் முன் மாரிமுத்து இறந்து விட்டார். இதனால் அவரை போன்ற குரல் வளம் உடையவரை தேடி கண்டுபிடித்து டப்பிங் பேச வைத்தோம். புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது” என்றார்.