ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் | சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 170 வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அப்படக் குழு அங்கிருந்து இடம்பெயர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பனங்குடியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்கள். இந்த ஊரில் மூன்று நாட்கள் ரஜினி 170 வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ரஜினிகாந்த் நெல்லை மாவட்டம் பனங்குடிக்கு காரில் சென்றார். அங்கே ரசிகர்கள் படை எடுத்துள்ளார்கள். அப்போது காவல்துறை பாதுகாப்பாக ரஜினியை படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் பனங்குடிக்கு ரஜினி காரில் சென்ற போது காருக்குள் இருந்தபடியே ரசிகர்களுடன் கைக்குலுக்கிய வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 170வது படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.