இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கடந்த 2019ல் தெலுங்கில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் யாத்ரா. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை, குறிப்பாக அவர் ஆட்சியை பிடிப்பதற்காக நடத்திய பாதயாத்திரையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. இதில் ராஜசேகர் ரெட்டி கதாபாத்திரத்தில் தான் மம்முட்டி நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றதுடன் ஆந்திர அரசியலில் கொஞ்சம் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த படத்தை மகி ராகவ் என்பவர் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் யாத்ரா 2 என்கிற பெயரில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதை முழுவதுமே ராஜசேகர் ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்வருமான ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். மகனைப் பற்றிய கதை என்பதாலும் இந்த படத்தில் அப்பாவுக்கான வேடத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பதாலும் இதில் மம்முட்டி நடிக்கவில்லை என்றே இதுநாள் வரை சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதை நடிகர் மம்முட்டியே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஜீவாவுடன் மம்முட்டியின் படமும் இடம் பெற்றுள்ளதை பார்க்கும்போது மம்முட்டியும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது 100% உறுதியாகி உள்ளது. வரும் பிப்ரவரி 8ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.