டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இசை ரசிகர்களால் சின்னக்குயில் என செல்லமாக அழைக்கப்படும் பின்னணி பாடகி சித்ரா, கடந்த 40 வருடங்களாக தனது இசை பயணத்தை தொடர்ந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும், மலாய், லத்தீன், அரபி, பிரெஞ்ச் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார் சித்ரா.
இந்த நிலையில் முதன்முறையாக பஞ்சாரா மொழியில் ஒரு பாடலை பாடியுள்ளார். பஞ்சாராவில் பாரம்பரிய உடையை அவர் அணிந்து வந்து இந்த பாடலை பாடியது தான் இதில் ஹைலைட்டான அம்சம். ஆம்தர் நிவாஸ் என்கிற படத்திற்காக தான் இந்த பாடலை பாடியுள்ளார் சித்ரா. விநாயக் பவார் என்பவர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு எம்.எல். ராஜா என்பவர் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை சித்ராவுடன் இணைந்து எம் ஸ்ரீனிவாஸ் சவான் பாடியுள்ளார். சஞ்சீவ் குமார் ரத்தோர் என்பவர் இயக்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு முதன்முதலில் பஞ்சாரா மொழியில் பாடிய தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார் சித்ரா.




