தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

'கேம் சேஞ்சர்' படத்தில் தற்போது நடித்து வருகிறார் ராம்சரண். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், பிரமாண்ட பட்ஜெட்டில் இதனை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிவடைந்திருக்கிறது. குறிப்பாக ராம் சரண் தொடர்பான காட்சிகள் முடிவடைந்து விட்டது. இதனால் அவர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். ஆன்மிக சுற்று பயணங்களும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக மும்பை சென்ற ராம் சரண் அங்கு இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர், கேப்டன் தோனியை சந்தித்து பேசினார். அப்போது தனது 'கேம் சேஞ்சர்' படம் பற்றி அவருடன் பகிர்ந்து கொண்டார். தோனியும் அடுத்து தெலுங்கில் ஒரு படம் தயாரிப்பது குறித்து ராம் சரண் உடன் கலந்துரையாடினார். இது மரியதை நிமித்தமான சந்திப்பு எனறு கூறி சந்திப்பு படங்களை வெளியிட்டுள்ளார் ராம் சரண்.




