பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
‛சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தொடர்ந்து, ‛நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷின் 50வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தில் இவர் இணைந்துள்ளார்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினியின் 170வது படத்தை ‛ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று முதல் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்தவகையில் நேற்று அனிருத் இசையமைப்பதாக அறிவித்தனர். இன்று(அக்., 2) நடிகை துஷாரா விஜயன் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.