அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் சுந்தர். சி, படங்களை இயக்குவதைத் தாண்டி அவ்வப்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒன் டூ ஒன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இவர்களுடன் நீத்து சந்திரா, ராகினி திவேதி ஆகியோரும் நடிக்கின்றனர். கே.திருஞானம் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்க, 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் ரயில் இடம் பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்த படம் ரயில் பின்னணியில் நடக்கும் ஆக் ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.