அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த 2018ல் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கிய படம் 'அயலான்'. ரகுல் பீர்த் சிங் , இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏலியன் தொடர்பான கதையில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படம் இந்த வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் 2024 பொங்கலுக்கு தள்ளியாவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் "இந்த படத்தின் டீசரின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது. வருகின்ற அக்டோபர் 6ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் "என படக்குழுவினர் இன்று ஒரு போட்டோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் ரஹ்மான், சிவகார்த்திகேயன், ரவிக்குமார் ஆகியோருடன் ஒரு ஏலியன் பொம்மையும் உடன் உள்ளது.