ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. 500 கோடி வசூலைக் கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக வசூலித்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் தொடர்ந்து ஓடி கடந்த வாரம் 50வது நாளைக் கடந்தது. நேற்றோடு இந்தப் படத்தின் ஓட்டம் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் தியேட்டர்களில் தொடர்கிறது. சென்னையில் மூன்று தியேட்டர்கள், திருச்சியில் ஒரு தியேட்டர், மதுரையில் ஒரு தியேட்டர், கோவையில் இரண்டு தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
50வது நாளைக் கடந்து ஓடினாலும் 'விக்ரம்' படம் போல அதிக தியேட்டர்களில், அதிகக் காட்சிகளில் 'ஜெயிலர்' ஓடவில்லை என கமல்ஹாசன் ரசிகர்கள் மறுபக்கம் விமர்சித்து வருகிறார்கள். நாட்கள் குறைவாக ஓடினாலும், 'விக்ரம்' வசூலை குறைந்த நாட்களில் முறியடித்தது 'ஜெயிலர்' என ரஜினி ரசிகர்கள் பதிலுக்கு விமர்சித்து வருகிறார்கள்.