பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருக்கும் திரிஷா, அடுத்து அஜித்துடன் விடாமுயற்சியில் நடிக்கப் போகிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார் திரிஷா. அதோடு தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‛தி ரோடு' என்ற படம் அக்டோபர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் தற்போது திரிஷா அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள நியூயார்க் நகரத்தில் உள்ள சாலைகளில் சைக்கிளில் அவர் ரைடு சென்றுள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திரிஷா. இந்த வீடியோவை அவர் பதிவிட்ட இரண்டு மணி நேரத்தில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.