'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த '3' படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015ம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடிப்பில் ‛வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான ‛லால் சலாம்' படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது. சமீபத்தில் ‛லால் சலாம்' படத்திற்கான ரஜினியின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்டை இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வெளியான அறிவிப்பில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.