காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர் நாகார்ஜூனா இவர் தெலுங்கு சினிமா அல்லாமல் தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமானவர். வெற்றி, தோல்விகளை கடந்து இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் நாகார்ஜூனாவின் 99வது படத்திற்கு 'நா சாமி ரங்கா' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர். இந்த படத்தை நடன இயக்குனர் விஜய் பென்னி இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இந்த படம் வெளியாகிறது.
இப்போது இந்த படத்தில் நடிக்க இளம் கதாநாயகிகள் ஆஷிகா ரங்கநாத், ஜெயிலர் படத்தில் பிரபலமான நடிகை மிர்ணா மேனன் இருவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.