ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் |

2023ம் ஆண்டின் கடைசி கட்ட மாதங்களில் நுழைந்துவிட்டோம். இன்னும் 90 நாட்களில் இந்த வருடம் முடிவடைய உள்ளது. இதுவரை கடந்து போன 270 நாட்களில் 175 படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்த 90 நாட்களில் 25 படங்கள் வெளிவந்தாலே இந்த ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்து விடும். ஆனால், வெளிவர உள்ள படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது 225ஐக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது.
அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான அக்டோபர் 6ம் தேதி 10 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. “800, தில்லு இருந்தா போராடு, என் இனிய தனிமையே, எனக்கு என்டே கிடையாது, இறுகப்பற்று, இந்த கிரைம் தப்பில்ல, மார்கழித் திங்கள், ஷாட் பூட் த்ரீ, ரத்தம், த ரோடு” ஆகிய 10 படங்கள் அன்றைய தினத்தில் வெளியாக உள்ளன.
இந்தப் படங்களில் எத்தனை வெளிவரும் என்பது வெளியீட்டிற்கு முந்தைய நாள்தான் தெரிய வரும். இது போல 10 படங்கள் வாரத்திற்கு வெளிவந்தால் 2023ல் வெளியான படங்களின் எண்ணிக்கை 300ஐத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




