நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா 2' படம் வெளிவந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. கடந்த ஒரு மாதத்தில் பல வசூல் சாதனைகளைப் படைத்து வரும் இப்படம் தற்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஒரு காலத்தில் ஹிந்தித் திரையுலகத்தில் 100 கோடி வசூல் படங்கள் என்பது ஆரம்பமானது. தற்போது அந்த 100 கோடி கிளப் எல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. 500 கோடி கிளப் என்பதுதான் சராசரி வசூல் என பேசப்பட்டது. அடுத்து அது 1000 கோடி வசூலுக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தியில் மட்டும் ஆரம்பமான 100 கோடி கிளப், இப்போது 800 கோடி கிளப் ஆக புதிய அளவுகோலை ஆரம்பித்து வைத்துள்ள 'புஷ்பா 2' படம். கடந்த 31 நாட்களில் 806 கோடி வசூலைப் பெற்றுள்ளது. ஹிந்தி பாக்ஸ் ஆபீஸில் இதுவரை வெளியான படங்களின் வசூலில் இப்படம்தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது.




