ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் |

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 294 கோடி, இரண்டாம் நாளில் 449 கோடி, மூன்றாம் நாளில் 621 கோடியாக வசூலித்தது. நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் இப்படத்தின் வசூல் உயர்ந்து அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி 800 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல் மூன்று நாள் வசூலை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது பட நிறுவனம். அது மட்டுமல்ல இரண்டரை நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்தும் சாதனை படைத்தது. கடந்த நான்கு நாட்களாக இப்படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கிறது. இன்று திங்கள் கிழமை வார நாளின் முதல் நாள் என்பதால் வசூல் குறைய வாய்ப்பி இருக்கிறது. இருந்தாலும் அடுத்த சில நாட்களில் இப்படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா மாநிலங்களிலும் நன்றாக ஓடினாலும் கேரளாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைத் தராதது ஆச்சரியமாக உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலித்து வருகிறது என்றும் டப்பிங் படங்களின் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றும் சொல்கிறார்கள்.




