வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
ரஜினிக்கு எப்போதுமே நாடகங்கள் பிடிக்கும், புதிதாக யார் நாடகம் போட்டாலும் மாறுவேஷத்தில் சென்று பார்த்து விடுவார். அப்படி அவர் பார்த்து வியந்த நாடகம்தான் 'கீழ்வானம் சிவக்கும்'. விசு மற்றும் அவரின் சகோதரர்கள் கிஷ்மு, ராஜாமணி ஆகியோர் நடத்தி வந்த நாடகம் அது. நாடகம் முடிந்ததும் விசுவிடம் பேசிய ரஜினி, “கீழ்வானம் சிவக்கும் நாடகத்தை நாம் சினிமாவாக பண்ணலாம். அதில் அப்பா, மகன் இரண்டு கேரக்டரிலும் நானே நடிக்கிறேன்” என்றார். விசுவும் ஒப்புக் கொண்டார்.
அதன்பிறகு அதே நாடகத்தை சிவாஜியும் பார்த்தார். அவரும் அந்த நாடகத்தை திரைப்படமாக்க விரும்பியபோது விசுவால் எதுவும் செய்ய முடியவில்லை. இதை அவர் ரஜினியிடம் சொன்னபோது “ரொம்ப சரியான சாய்ஸ். சிவாஜி சார் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கூறிவிட்டார்.
படத்தின் கதை இதுதான். மருத்துவரான சிவாஜி அன்பானவர், அமைதியானவர், ஒரு நாள் கண்பார்வையற்ற ஜெய்சங்கர் சிவாஜியிடம் வந்து எனக்கு எப்படியாவது கண்பார்வை கொடுங்கள் டாக்டர் என் தங்கையை(மேனகா) கற்பழித்து கொன்றவனை பழிவாங்க வேண்டும் என்கிறார். தங்கையை கெடுத்தவனின் படத்தை சிவாஜியிடம் காட்டுகிறார். அது சிவாஜியின் மகன் சரத்பாபு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
உண்மையை மறைக்க சிவாஜி முயற்சிப்பதும், அதை வெளியில் கொண்டுவர அவரது மருமகள் சரிதா போராடுவதும்தான் திரைக்கதை. இருவர் பேசும் வசனங்கள் விசுவின் பேனாவில் இருந்து நெருப்பு மாதிரி எழுதப்பட்டிருக்கும். படம் 1981 தீபாவளியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.