சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன் மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் 'இறுகப்பற்று'. அன்றைய தினம் வெளியான 9 படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் மட்டுமே தாக்குப் பிடித்து இன்று 25வது நாளைக் கடந்திருக்கிறது.
இது குறித்து படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான விக்ரம் பிரபு, “நன்றி, நன்றி, நன்றி... இறுகப்பற்று படத்திற்குக் கிடைத்த அன்பு… 4 வாரங்களைக் கடந்தும் தியேட்டர்களில் இருப்பதும் எங்கள் குழுவினருக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இது தியேட்டர்களில் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான செயல்பாட்டில் மக்களுக்குச் செய்த விதத்திலும் கிடைத்த வெற்றி. இது போன்ற படங்கள் மில்லியனில் ஒன்று. அதை உங்கள் அனைவருக்கும் கொண்டு வந்த இந்த அற்புதமான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்… நன்றியுடன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் நடித்த 'லியோ' படம் வெளிவந்த பின்னும் இந்தப் படம், தியேட்டர்களில் எந்தவிதமான சத்தமும் ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற படங்களுக்கு வசூல் முக்கியமல்ல, மக்களின் வரவேற்பே முக்கியம்.