எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடன கலைஞர் ஆக அறிமுகமாகி அதன் பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். கடந்த சில வருடங்களாக நடிகர், இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார் .இப்படம் வருகின்ற நவம்பர் 10ந் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இதில் அவருடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார்.
இந்த நிலையில் துபாயில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் துபாய் சென்றுள்ளனர். நேற்று லாரன்ஸ் பிறந்தநாளை கேக் வெட்டி அங்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் உடன் கொண்டாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.