ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட் | சிகரெட் : ரசிகர்களுக்கு சூர்யாவின் வேண்டுகோள் | ராமாயணா படத்தில் சீதா கதாபாத்திரம் கிடைக்காமல் போனது ஏன்: ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி : முன்பதிவு நிலவரம் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி | மகனுக்காக படம் தயாரிக்காதீர்கள் : தயாரிப்பாளர்களுக்கு பேரரசு வேண்டுகோள் |
தமிழில் வெளியான 'இமைக்கா நொடிகள், லியோ, மகாராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வந்த இவர், தற்போது பாலிவுட்டையே விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாலிவுட் திரையுலகம் நச்சுத்தன்மை மிகுந்ததாக மாறிவிட்டது. நான் அவர்களிடமிருந்து தூர விலகியிருக்க விரும்புகிறேன். யதார்த்ததுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை நோக்கியே அவர்கள் நகர்கிறார்கள். ரூ.500 கோடி, ரூ.800 கோடி படங்களை இயக்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். அழுத்தமான கதையம்சம் கொண்ட கிரியேட்டிவ் சூழல் பாலிவுட்டில் இல்லை.
தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது. இப்போது என்னால் பரிசோதனை சார்ந்த முயற்சிகளைக்கூட இங்கே மேற்கொள்ள முடியவில்லை. காரணம், தயாரிப்பாளர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள். படம் எடுக்கும்போதே அதனை எப்படி விற்பது, லாபம் என்ன என்றே தயாரிப்பாளர்கள் சிந்திக்கின்றனர். இதுபோன்ற படங்களை தயாரிக்க விருப்பமில்லை என்றால், படமே எடுக்காதீர்கள் என சொல்லத்தோன்றுகிறது. ஒரு படம் உருவாவதற்கு முன்பே, அதை எப்படி வியாபாரமாக்க போகிறோம் என யோசிக்கிறார்கள். அதனால் படம் இயக்குவதற்கான மகிழ்ச்சியே காணாமல் போகிறது. இதனால் தான் நான் முற்றிலுமாக பாலிவுட்டிலிருந்து விலகுகிறேன். விரைவில் மும்பையிலிருந்து வெளியேறுகிறேன். இவ்வாறு அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
தற்போது இந்திய திரையுலகம், பான் இந்தியா வெளியீட்டை நோக்கியே நகர்கிறது. அதிக லாபத்தை தர வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும்பாலான படங்கள் இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு நாடு முழுதும் வெளியிடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஹிந்தி, தெலுங்கு படங்கள் அதிகம் பான் இந்தியா ரிலீசாக வெளியிட்டு வருகின்றனர். இதனை பல மாநிலங்களுக்கு சென்று புரமோஷன் செய்து, அதன்மூலமும் வியாபாரமாக்குகின்றனர். இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமல்லாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் வெளிச்சத்திற்கு வராமல், படைப்பாளிகள் இருட்டிலேயே தவிக்கின்றனர்.
இது போன்ற ஆதங்கத்தால் தான் அனுராக் காஷ்யப், பாலிவுட்டை வெறுக்கும் அளவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழிலும் சில படங்கள் பான் இந்தியா வெளியீடாக வந்தாலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கும் வரவேற்பும், லாபமும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு மகாராஜா படத்தை கூறலாம்.