டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழில் கடந்த செப்.,15ம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் கிடைத்ததால், வசூலும் ரூ.60 கோடிக்கு மேல் குவித்தது. ஹிந்தியில் நேற்று இந்த படம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங்கிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களாக பணம் செலுத்திய வங்கி கணக்கு விபரங்களையும் விஷால் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இதை மஹாராஷ்டிராவின் முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக என வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் விஷாலின் ஊழல் குற்றச்சாட்டு புகாரை ஏற்ற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சம், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛சென்சார் துறையில் விஷால் வைத்த ஊழல் விவகாரம் மிகவும் துரதிர்ஷடவசமானது. இந்த அரசு ஊழலை பொறுத்துக் கொள்ளாது. இதில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விசாரணை நடந்த அதிகாரி மும்பை சென்றுள்ளார். இதுபோன்று வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் இருந்தால் சென்சார் போர்டின் jsfilms.inb@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு தெரிவித்து அமைச்சகத்துடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.