விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து |
சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்து வந்தார். கடந்த 2018ல் விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் ஸ்வாதி. இந்த நிலையில் இவருக்கும் கணவர் விகாஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளனர் என்றும் கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. ஸ்வாதி தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்த தனது கணவரின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் என்பதும் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ஸ்வாதி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 'மந்த் ஆப் மது' என்கிற படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்வாதியிடம் உங்கள் கணவருடனான விவாகரத்து செய்தி உண்மையா, இல்லையா ? இதுபற்றி உங்கள் விளக்கம் என்ன என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஸ்வாதி, “இதுபற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நான் 16 வயதிலேயே சினிமாவிற்கு வந்து விட்டேன். சினிமாவில் எப்படி நடந்து கொள்வது, பேசுவது என்பது எனக்கு அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இப்போது ஒரு தொழில் முறை நடிகராக எல்லாவற்றுக்கும் நானே சில விதிமுறைகளை வகுத்துள்ளேன். அதன்படி இந்த விஷயத்திற்கும் இப்போது நடைபெறும் நிகழ்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல நான் என்னுடைய பர்சனல் வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. அதனால் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க போகவில்லை” என்று கூறியுள்ளார்.