காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
கன்னட சின்னத்திரை தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரக்ஷ் ராம் நடிக்கும் படம் 'பர்மா'. இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா படமாக தயாராகிறது. புனித் ராஜ்குமாரின் கடைசி படமான 'ஜேம்ஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சேத்தன்குமார் இதனை இயக்குகிறார். வி.ஹரிகிருஷ்ணா இசை அமைக்கிறார். சங்கேத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் துவக்க விழா பசவங்குடி தொட்ட கணபதி கோவிலில் நடந்தது. அஷ்வினி புனித் ராஜ்குமார் கிளாப் அடிக்க, ராகவேந்திரா ராஜ்குமார் கேமராவை இயக்கி, படத்தை துவக்கி வைத்தனர். துருவா சர்ஜா முதல் ஷாட்டை இயக்கினார். இந்த படத்தில் ரக்ஷ் ராமுடன் ஆதித்யா மேனன் மற்றும் தீபக் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபரில் துவங்கவுள்ளது, மேலும் இப்படத்தில் பங்குபெறவுள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படுகிறது.