ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
ஆர்யா நடித்து வரும் வெப் தொடர் 'தி வில்லேஜ்'. நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இந்த தொடரை இயக்குகிறார். வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், ஜார்ஜ், ஜான் கொகேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி ஸ்டூடியோ சார்பில் ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார்.
கிராமிய பின்னணியில் உருவாகும் திகில் ஹாரர் தொடர். தற்போது இதன் பணி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் முதல் பார்வை ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிசம்பர் மாதம் 'தி வில்லேஜ்' தொடர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.