‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'கலக்க போவது யாரு' சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பிரபலமானவர் விக்னேஷ் கார்த்திக். இதை தொடர்ந்து கிங் ஆப் காமெடி சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு பல சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
'பகல் நிலவு' என்ற தொடரில் நடித்தார். அதன் பிறகு திரைப்பட நடிகரான விக்னேஷ் கார்த்திக் 'நட்பதிகாரம் 79, சோலா பூரி, குற்றம் நடந்தது என்ன, போன்ற படங்களில் நடித்தார். பின்னர் 2018ம் ஆண்டு வெளியான 'ஏன்டா தலையில எண்ண வெக்கல' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இதை தொடந்து, திட்டம் இரண்டு படத்தை இயக்கினார். கடைசியாக 'அடியே' படத்தை இயக்கினார். அது நல்ல வரவேற்பை பெற்றது.
நேற்று முன்தினம் விக்னேஷ் கார்த்திக்கின் திருமணம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த படங்கள் வெளியாகி உள்ளது. மணமகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.