பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி |

விஷால் நடித்து வெளிவந்த 'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றிக்காக கடந்த வாரம் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அப்போது பேசிய விஷால், “ஒரு கோடியிலிருந்து நான்கு கோடி ரூபாய் வரை பட்ஜெட் வைத்துக் கொண்டு படம் எடுக்க வராதீர்கள்,” என்று பேசியிருந்தார். அந்த பேச்சு தற்போது திரையுலகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் விஷால் பேச்சை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்போது அவர் சிறிய தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவோம் என்றெல்லாம் பேசியிருந்தார். அப்படிப் பேசிவிட்டு தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த விஷால், 'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்படி பேசுவது சரியல்ல என்று பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள்.
இதற்கு முன்பு விஷால் தயாரித்த, நடித்த படங்களின் பட்ஜெட் 20 கோடி வரையிலாவது இருந்திருக்கும். அவ்வளவு செலவு செய்து எடுத்த படங்கள் ஏன் ஓடவில்லை என்பது குறித்தும் அவர் பேசியிருக்க வேண்டும் என்கிறார்கள். இது குறித்து திரையுலகத்தில் உள்ள சிலரிடம் பேசிய போது, ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் பட்ஜெட்டில் அல்ல, கதையில்தான் இருக்கிறது என்பது கூட இத்தனை வருடங்கள் ஆன பிறகும் விஷாலுக்குப் புரியாமல் இருக்கிறதே என கொந்தளிக்கிறார்கள்.
விஷால் உடனடியாக அவரது பேச்சை வாபஸ் பெற வேண்டும் என்று பல சிறிய தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்கள்.




