''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம் கர்நாடகாவில் தமிழர்களும், தமிழர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்கள், தமிழ்ப் படங்களை வெளியிடும் தியேட்டர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். இன்று கர்நாடகவில் பந்த் நடந்து வருகிறது. காவிரி விவகாரம் வரும்பேதெல்லாம் தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைத் திரையிடுவதை நிறுத்திவிடுவார்கள்.
தமிழகத்திற்கு அதிக மழைநீரைத் தரும் வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இந்த காவிரி விவகாரம் சூடான நிலையிலேயே இருக்கும். நவம்பர் மாதம்தான் அப்பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கன்னடத்திலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். நேரடியாகவும் கர்நாடகா முழுவதும் படம் வெளியாக உள்ளது. அம்மாநில உரிமையாக சுமார் 15 கோடிக்கு வியாபரம் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படம் கர்நாடகவில் மட்டும் சுமார் 75 கோடி வசூலித்துள்ளது. அதைவிட அதிகத் தொகையை 'லியோ' படம் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காவிரி போராட்டம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளதால் செப்டம்பர் 28 வெளியாக உள்ள தமிழ்ப் படங்கள் மற்றும் வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்கள் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.