மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. வருகிற டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் தனுசுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், ஜி.வி .பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், கேப்டன் மில்லர் படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த பாடலின் இரண்டு வரிகளையும் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்...'' என்று பதிவிட்டுள்ளார் ஜி. வி.பிரகாஷ். இந்த பாடலை கேபர் வாசுகி என்பவர் எழுதியுள்ளார்.