'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையை மையமாக வைத்து சயின்ஸ் பிக் ஷன் படமாக தயாராகி வருகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 3 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் உள்ளது. வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் பட பணிகள் முடியாததால் தள்ளிப்போவதாக ஒருவாரமாகவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ‛அயலான்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். படத்தில் கிராபிக்ஸ் தொடர்பான பணிகள் அதிகளவில் உள்ளதாம். அந்த பணிகள் முடியாததால் படத்தை தள்ளி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
இதனிடையே, ‛‛அயலான் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம். நிச்சயம் அயலான் உங்களை மகிழ்விப்பான்,'' என இயக்குரனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.