அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி |
கார்த்தியின் 25வது படம் 'ஜப்பான்'. ராஜு முருகன் இயக்குகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.
படம் பற்றி கார்த்தி கூறியிருப்பதாவது: ஒரு கிரைம் திரில்லராக உருவாகும் இப்படம் மனித வேட்டையையும் உள்ளடக்கியது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ஆழமாக பின்னப்பட்டுள்ளன. மேலும் பல ஆரவாரமான அம்சங்களும் கொண்ட தனித்தன்மை கூட்டணியாக உருவாகி வருகிறது.
துணிச்சலான மற்றும் உற்சாகமான அதேசமயம் ஆர்ப்பாட்டமில்லாத இந்த கதாபாத்திரமும் இயக்குநர் ராஜூ முருகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வமும் தான் என்னை இந்த படத்துக்குள் இழுத்து வந்தது. குக்கூ மற்றும் ஜோக்கர் என அவருடைய முந்தைய இரண்டு படங்களை நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். மேலும் இந்த சமூகம், இங்குள்ள கலாச்சாரம் குறித்த அவரது புரிதல் ரொம்பவே அழகானது.
சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவரும் விதமான சாத்தியம் இந்த படத்துக்கு இருக்கிறது. அதனால்தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் வரவேண்டும் என நான் விரும்பினேன். அவருடைய பார்வை இப்படத்தை மாற்றும் என நாங்கள் நம்பியதை போலவே நாங்கள் இப்போது சாதித்திருக்கிறோம் என்றும் நினைக்கிறேன். பக்காவான உள்ளூர் சுவையில் அதேசமயம் உலகத்தரத்தில் இதை வழங்குகிறோம். என்கிறார் கார்த்தி.