கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'விடாமுயற்சி'. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு குறித்து பல தகவல்கள் வெளியானது. ஆனால், அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
சமீபகாலமாக விடாமுயற்சி படக்குழுவினர் துபாய் பகுதிகளை சுற்றி படப்பிடிப்பிற்கான லோகெஷன் தேடும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 29ம் தேதியில் துபாயில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித் அரபு நாடுகளில் தான் பைக் சுற்று பயணத்தில் உள்ளார். அதை முடித்ததும் அப்படியே படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.
இதனிடையே இதில் நாயகியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. இப்போது இன்னொரு நாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அஜித் உடன் இணைந்து வலிமை படத்தில் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.