ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
நடிகர் உன்னி முகுந்தன் மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் அவர் மீதான கவனம் அதிகமாகியுள்ளது. மாளிகைப்புரம், மேப்படியான் என இரண்டு படங்களை தயாரித்து தொடர்ந்து கோடிகளில் லாபத்தை ஈட்டியதாகட்டும், கேரளா வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய ஒரே ஒரு நடிகர் இவர்தான் என்பதாகட்டும், சமீபத்தில் தன் மீது கூறப்பட்ட பாலியல் புகார் குற்றச்சாட்டில் இருந்து உண்மை நிரூபணமாகி வெளி வந்ததாகட்டும், இப்படி தொடர்ந்து லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார் உன்னி முகுந்தன்.
தமிழில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனுஷின் சீடன் படத்தில் கதாநாயகனாக நடித்த உன்னி முகுந்தன், மீண்டும் தமிழில் தற்போது சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் சசிகுமாருடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள உன்னி முகுந்தன், “நம்புங்கள்... நடிகர் கமல்ஹாசனை சந்தித்தபோது, ஐந்து நொடிகளுக்கு எனக்கு மூச்சே நின்று விட்டது போல ஆகிவிட்டது. அவர் என்னை கை கொடுத்து வரவேற்றது, கட்டி அணைத்தது, நான் கமல்ஹாசன் அருகில் தான் நிற்கிறேனா என்கிற உணர்வில் இருந்தது எல்லாமே ஒரு கனவு போல இருந்தது. அதை எல்லாம் நிரூபிப்பதற்கு என்னிடம் புகைப்படங்கள் எதுவும் இல்லை” என்று பரவசத்துடன் கூறியுள்ளார்.