கார்திக்கிற்கு கை கொடுப்பாரா வாத்தியார்? | இசை ஆல்பம் மூலம் தமிழுக்கு வரும் குஷி ரவி | பிளாஷ்பேக் : கதை நாயகனாக நடித்த மவுலி | பிளாஷ்பேக் : பர்மா அகதிகளின் கதை | ஷபானாவா இது... : குழம்பிய ரசிகர்கள் | சின்னத்திரையில் பாண்டியராஜன் | எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா |
மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் கர்னாடக இசை வாசித்து, இளம் வயதிலேயே உலக இசை மேடைகளில் சாதனை நிகழ்த்தியவர், இசை மேதை மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ்.
வளசரவாக்கம் மண்டலம், 130 வது வார்டு, வடபழனியில் குமரன் காலனி பிரதான சாலையில், மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ் இல்லம் அமைந்துள்ளது. அவர் நினைவாக, இச்சாலைக்கு, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் முதன்மை சாலை என பெயர் மாற்றப்பட்டு, பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.
இதனை மாநகராட்சி மேயர் பிரியா திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி மாண்டலின் ஸ்ரீனிவாசனின் தந்தை சத்திய நாராயணா, அவரது சகோதர் மாண்டலின் ராஜேஷ், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், வீணை கலைஞர் ராஜேஷ் வைத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.