மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்.,5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான 'கோல்டன் டிக்கெட் பார் இந்தியன் ஐகான்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. நேற்று நடிகர் ரஜினிகாந்தும் இந்த டிக்கெட்டை பெற்றார். அவருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கினார்.
இந்நிலையில் டிக்கெட் பெற்ற ரஜினி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛2023 ஐசிசி உலக கோப்பை தொடருக்காக பிசிசி-யிடமிருந்து மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக பிசிசிஐக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புள்ள ஜெய்ஷா ஜி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் நன்றி,'' என பதிவிட்டுள்ளார்.