2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிரதர்'. இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறதோ என்று ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் அது ஒரிஜனல் டிசைன் இல்லை, காப்பியடிக்கப்பட்ட டிசைன் என உடனடியாக சமூக வலைத்தளங்களில் பரவியது. 2021ம் ஆண்டு வெளியான 'பிரீத் ஆப் டெஸ்டினி' என்ற கொரியன் சீரிஸ் போஸ்டர்களிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர்.
சரி, போஸ்டர் டிசைனைத்தான் காப்பியடித்துள்ளார்கள் என்று பார்த்தால், ஒரிஜனல் போஸ்டரில் உள்ள கதாபாத்திரம் அணிந்த அதே விதமான பேண்ட், ஷர்ட், ஷு என கலரையும் சேர்த்து காப்பியடித்துள்ளார்கள்.
இன்றைய ஓடிடி யுகத்தில் இப்படியெல்லாம் காப்பியடித்தால் உடனடியாக தெரிந்துவிடாதா.